கராத்தே பயிற்சி முடித்த மாணவிகளுக்கு எஸ்பி சான்றிதழ் வழங்கல் !

கராத்தே பயிற்சி முடித்த மாணவிகளுக்கு எஸ்பி சான்றிதழ் வழங்கல் !

கராத்தே பயிற்சி

திருப்பத்துார் அரசு மீனாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கராத்தே பயிற்சி முடித்த மாணவிகளுக்கு எஸ்பி சான்றிதழ் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்துார் அரசு மீனாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கராத்தே பயிற்சி முடித்த மாணவிகளுக்கு எஸ்பி சான்றிதழ் வழங்கினார் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி போலீஸ்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி முடிவடைந்த நிலையில், மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்துார் அரசு மீனாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எஸ்பி ஆல்பர்ட்ஜான் தலைமை வகித்து கராத்தே பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

அப்போது கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம்,டிஎஸ்பிக்கள் செந்தில்(திருப்பத்துார்) விஜயகுமார்(வாணியம்பாடி) சுரேஷ்(மாவட்ட குற்றப்பிரிவு) தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன்,பள்ளி துணை ஆய்வாளர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story