ஆட்சியரகத்தில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு
செய்தியாளர் சந்திப்பு
ஆட்சியரகத்தில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வாக்கு எண்ணும் மையத்தில் போதிய முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும், அமைதியான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என செய்தியாளர் சந்திப்பின்போது தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகம், தகவல். நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் கற்பகம், தலைமையில் மே 31 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்த போது நடைபெற்று முடிந்த பாராளுமன்றப்பொதுத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடைபெறவுள்ளது. காலை 8.00 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குள் எண்ணும் பணி தொடங்கும். இதுவரை 10,122 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதி அன்று காலை 8.00 மணி வரை மட்டும் பெறப்பட்ட தபால் வாக்குகள் மட்டும் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு 20 சுற்றுகளும், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு 18 சுற்றுகளும், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு 20 சுற்றுகளும், முசிறி சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுகளும், துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு 20 சுற்றுகளும், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு 24 சுற்றுகளும் எண்ணப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் அறையிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையிலும் 1 எண்ணிக்கை மேற்பார்வையாளர், 2 எண்ணிக்கை உதவியாளர்கள் மற்றும் 1 நுண் பார்வையாளர்கள் என 56 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தவிர காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என 1,125 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணுகைக்காக வேட்பாளர்களால் 1,200 முகவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படும். வாக்குகள் எண்ணுகை மையத்திற்கு கைபேசி எடுத்துவர அனுமதி இல்லை. செய்தியாளர்கள் ஊடக மையத்திற்குள் மட்டும் செல்பேசிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். வாக்கு எண்ணும் மையத்தில் போதிய முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும், அமைதியான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, சார் ஆட்சியர் கோகுல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயா, தேர்தல் பிரிவு வட்டாட்சியர்கள் அருளானந்தம், சிவா மற்றும் பலர் உடனிருந்தனர்.
Next Story