முகவரி கேட்பது போல் நடித்து சிறுமிடம் நகை பறிப்பு !!

முகவரி கேட்பது போல் நடித்து சிறுமிடம் நகை பறிப்பு !!

நகை பறிப்பு

குளச்சல் அருகே பெண்ணிடம்  முகவரி கேட்பது போல் அணிந்திருந்த ஒன்றரை பவன் நகையை திருடியவரை போலிசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே லியோன்நகரை சேர்ந்தவர் கெஜின் (42) கடலில் மீன் பிடித் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கெஜின் மனைவி ஷீலா சிஜி (40) தன்னுடைய 11 வயது மகளுடன் அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க வீட்டில் இருந்து புறப்பட்டார். வெளியே வந்ததும் சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மகளை மழைத்துளி படாத இடத்தில் நிறுத்திவிட்டு, குடை எடுப்பதற்காக வீடு நோக்கி புறப்பட்டார். அந்த சமயத்தில் ஹெல்மெட் அணிந்தபடி 30 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் வந்தார். பின்னர் சிறுமி அருகில் சென்று முகவரி கேட்பது போல் பேசினார். அப்போது திடீரென அவள் அணிந்திருந்த ஒன்றரை பவன் நகையை ஆசாமி பறித்தார். சிறுமி திருடன் திருடன் என்று சத்தம் போட்டதால் இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் ஷீலா சிஜியும் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story