குமரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

குமரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

பைல் படம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளாவை ஒட்டி தென்மேற்கு பருவமழை பெய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகி வருகின்றன.கடந்த காலங்களில் மாவட்டத்தின் பல இடங்களிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் காணப்பட்டன இதனால் உயிர் இழப்புகள் நிகழ்ந்துள்ளது. தற்போது குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இன்னும் அதிகரிக்கவில்லை.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் அதற்கு முன்னதாக கொசுக்களை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் சுகாதாரத் துறை சார்பில் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,256 பணியாளர்கள் இதற்காக 9 ஒன்றியங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story