காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள்
காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை அரியலூர் கலெக்டர் ஆய்வு செய்தார்
அரியலூர் மாவட்டம் கா. மேட்டுதெரு உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா ஆய்வு நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.
இதில் கா.மேட்டுதெரு பகுதியில் நடைப்பெற்று வரும் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்ததோடு, தங்களின் வீடுகளின் சுற்றுபுறத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் அகற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியினை ஆய்வு செய்ததோடு, மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். இதனையடுத்து திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு செய்து ஊசி, மருந்து, மாத்திரைகளின் இருப்பு விபரம் குறித்து கேட்டறிந்தார். இதில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.