வடகொரியா போன்ற அரசை இந்தியாவில் ஏற்படுத்த முன்னோட்டம் - பி டி ஆர்
அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்
வடகொரியாவை போன்ற அரசை இந்தியாவில் ஏற்படுத்த முன்னோட்டம் நடந்துள்ளது என சூரத் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றது குறித்து அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் முன்னோட்டம்: அமைச்சர் பி டி ஆர் மதுரை: வடகோரியாவை போன்ற அரசை இந்தியாவில் ஏற்படுத்த முன்னோட்டம் நடந்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜர் தெரிவித்துள்ளார். சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மனுவை நிராகரித்துவிட்டு பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவித்துள்ளனர். சூரத்தில் பாஜக வெற்றியை சர்வாதிகார ஆட்சி நடக்கும் வடகொரியாவுடன் ஒப்பிடுவதாக பழனிவேல் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
Next Story