விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல்!
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல்!
விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் இன்று விடப்பட்டுள்ள விலை பட்டியல்
விருதுநகர் சந்தை : உளுந்து, பாசிப் பருப்பு, வத்தல் விலை உயர்வு : நல்லெண்ணெய், துவரை விலை சற்று குறைவு .... விருதுநகர் சந்தையில் உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு, மல்லி மற்றம் வத்தல் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நல்லெண்ணெய், துவரம் பருப்பு ஆகியவற்றின் விலை சற்று குறைந்து காணப்பட்டது. விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு : நல்லெண்ணெய் 15 கிலோ தும்பை கடந்த வாரம் ரூ.6930 என விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.165 வரை குறைந்துள்ளது. எனவே, ரூ.6765 என விற்கப்படுகிறது. வத்தல் நாடு புதுசு வகையானது 100 கிலோ கடந்த வாரம் 16ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை விற்பனையான நிலையில் இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.2000 வரை உயர்ந்தள்ளது. எனவே, ரூ.18ஆயிரம் முதல் 20ஆயிரம் வரை விற்பனையாகிறது. மல்லி புதுசு நாடு வகை கடந்த வாரம் 40 கிலோ ரூ.3500 முதல் 4ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.4ஆயிரம் முதல் 4200 வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு புதுசு வகை 100 கிலோ ரூ.12500க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.500 சரிவு ஏற்பட்டு ரூ.12ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் வரை ரூ.9800க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.600 உயர்ந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.10,400க்கு விற்பனையாகிறது. இதேபோல் உளுந்து லயன் 100 கிலோ கடநத் வாரம் 100 கிலோ ரூ.9700 என விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ. 600 உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.10,300 என விற்கப்படுகிறது. பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,500 என விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.150 வரை உயர்த்தப்பட்டு தற்போது ரூ.10,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. பட்டாணி பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.6400 என விற்ற நிலையில் இத்ந வாரம் குவிண்டாலுக்கு ரூ.600 வரை குறைந்தது. எனவே, ரூ.5800க்கு விற்கப்படகிறது. அதேவேளை, பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
Next Story