ஆலங்குளத்தில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

ஆலங்குளத்தில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு
 சின்ன வெங்காயம் 
ஆலங்குளத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.60க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் பொருளாதாரத்தை ஈட்டும் முக்கியத் தொழிலாக விவசாயம் விளங்கி வருகிறது. இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம், சுரண்டை,பாவூர்சத்திரம், கடையம்,இலத்தூர், அச்சன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர், சின்ன வெங்காயம் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர், இதனால் கடந்த மாதம் வரை ஒரு கிலோ ரூ.30க்கு விலை போனது. இன்று 29ம் தேதி ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.60 விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story