விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம்
விருதுநகர் சந்தையில் துவரம் பருப்பு, உருட்டு உளுந்து, பாசிப் பருப்பு ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேவேளை முண்டு வத்தல், பட்டாணி பருப்பு ஆகியவற்றின் விலை சற்று குறைந்துள்ளது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியில் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன் விபரம் வருமாறு : முண்டு வத்தல் புதுஸ் கடந்த வாரம் 100 கிலோ ரூ.12ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் ஆரம்ப கட்ட விலை ரூ.1000 குறைந்துள்ளது. எனவே, ரூ.11ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு புதுசு லயன் வகையானது 100 கிலோ கடந்த வாரம் ரூ. 14 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.
இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.2500 வரை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, குவிண்டால் ஒன்று ரூ.16,500 என விற்பனையாகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு வகை ரூ.12,100 என விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.500 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.12,600 என விற்கப்படுகிறது.
உருட்டு உளுந்து எப்.ஏ.க்யூ வகையானது கடந்த வாரம் ரூ.10,700 என விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.11,700 என விற்பனை செய்யப்படுகிறது. பாசிப்பருப்பு 100 கிலோக நடந்த வாரம் ரூ.10,400 என விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.50 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.10,450 முதல் 10,500 வரை விற்பனையாகிறது. கடலை புண்ணாக்கு 10 கிலோ கடந்த வாரம் ரூ.5,500 என விற்கப்பட்டது.
இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 குறைந்துள்ளது. எனவே, ரூ.5300 என விற்கப்படுகிறது. பட்டாணி பருப்பு வெள்ளை இந்தியா வகை கடந்த வாரம் 100 கிலோ ரூ.6 ஆயிரம் என விற்கப்பட்டது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. எனவே, மூட்டை ஒன்றுக்கு ரூ.1500 குறைந்து தற்போது, மூட்டை ஒன்று ரூ.4500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாசிப்பயறு இந்தியா மீடியம் வகை கடந்த வாரம் 100 கிலோ ரூ.10,500க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.1300 குறைந்துள்ளது. எனவே, ரூ.9200க்கு விற்கப்படுகிறது. இதேபோல் நாடு வகை பாசிப்பயறு கடந்த வாரம் 9200க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.600 குறைந்துள்ளது. எனவே, ரூ.8600க்கு விற்பனையாகிறது. அதேவேளை, பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.