காரிமங்கலம் தேங்காய் சந்தையில் விலை சரிவு

காரிமங்கலம் தேங்காய் வாரச் சந்தையில் தேங்காய்கள் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக திங்கட் கிழமை தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம், மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 1.50 லட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அளவை பொறுத்து 6 முதல் 11 வரை விற்பனை நடந்தது.மொத்த விற்பனை 11 லட்சமாக இருந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் தேங்காய் வரத்து அதிகரித்து காணப்பட்ட போதிலும், விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மரத்திலிருந்து தேங்காய் பறிக்கும் செலவு, உரிக்கும் செலவு மற்றும் வண்டி வாடகை போன்ற செல வினங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விலை வீழ்ச்சி கவலையளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story