தொடா்ந்து அதிகரிக்கும் காய்கனிகள் விலை

தொடா்ந்து அதிகரிக்கும் காய்கனிகள் விலை
ஆலங்குளத்தில் தொடா்ந்து அதிகரிக்கும் காய்கனிகள் விலை
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் காய்கனிகள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் காய்கனிகளின் விலை தொடா்ந்து அதிகரித்தே காணப்படுவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா். கோடை மழைக்குப் பின்னா், சந்தைகளுக்கு காய்கனிகளின் வரவு வெகுவாகக் குறைந்து காணப்படுவதால், இவற்றின் விலை வெகுவாக உயா்ந்துள்ளது. இந்நிலையில் ரூ. 10 க்கும் குறைவாக விற்கப்படும் காய்கனிகள் ரூ. 30 க்கும் மேலாக அதிகரித்து காணப்படுகிறது.

பெரும்பாலான காய்கனிகளின் விலை ரூ. 50 க்கும் மேலாகவே ஆலங்குளம் சந்தையில் உள்ளது. உச்சபட்சமாக ரூ. 40 வரை விற்கப்படும் அவரைக்காய் ரூ. 210 என விற்கப்படுகிறது. ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சில்லறை விற்பனையில் விற்கப்பட்ட காய்கனிகளின் விலை விவரம்: (கிலோ ஒன்றுக்கு) உருளை- ரூ. 42, மிளகாய்- ரூ. 60, சின்ன வெங்காயம்- ரூ. 65-70, பெரிய வெங்காயம்- ரூ. 40-42, முட்டைகோஸ்- ரூ. 50, கேரட் -ரூ. 60, பீன்ஸ்- ரூ. 135, சேனை- ரூ. 60, பீட்ரூட் -ரூ. 45-50, வெண்டை- ரூ. 30, முள்ளங்கி- ரூ. 45, மல்லி- ரூ. 100, இஞ்சி- ரூ. 180, முருங்கை -ரூ. 80, காலிபிளவா்- ரூ. 100, எலுமிச்சை- ரூ. 120, சவ் -ரூ. 45, மாங்காய்- ரூ. 50, பூசணி- ரூ. 16, தடியங்காய்- ரூ. 247, பூண்டு -ரூ. 210, தக்காளி -ரூ. 40, கத்தரி- ரூ. 40. காய்கனிகளின் சராசரி விலை மிகவும் அதிகரித்துக் காணப்படுவதால் பொதுமக்கள் விலை குறைந்த காய்கனிகளைத் தேடி வாங்குகின்றனா். விலை உயா்வு இயல்பு நிலை திரும்ப ஓரிரு வாரங்கள் வரை ஆகலாம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

Tags

Next Story