தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பேரவை கூட்டம்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க 65 ஆம் ஆண்டு பேரவை கூட்டம்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க 65 ஆம் ஆண்டு பேரவை கூட்டம்
உடையாப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க 65-ம் ஆண்டு பேரவை கூட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் அன்னை கஸ்தூரிபா மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் சந்தானராஜ், இயக்குனர்கள் ஹரி, பாலகிருஷ்ணன், உண்ணாமலை ராஜேந்திரன், பழனியப்பன், விஸ்வநாதன் மற்றும் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை செயலாளர் கேசவன் நன்றி கூறினார். இதனையடுத்து கூட்டுறவு கடன் சங்க தலைவர் அருண்குமார் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளில் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு, மத்திய கால கடன், நகை கடன், உடல் ஊனமுற்றோர் கடன், அடமான கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் என இதுவரை ரூ.30 கோடிக்கும் மேலாக வழங்கப்பட்டுள்ளது. 2021-2022-ம் ஆண்டு தணிக்கையின்படி ரூ.22 லட்சத்து 93 ஆயிரம் நிகர லாபம் அடைந்துள்ளதாக கூறினார்.
Tags
Next Story