நாகர்கோவிலில் தொடக்கக் கல்வித்துறை ஆண்டு விழா
நாகர்கோவிலில் தொடக்கக் கல்வித்துறை ஆண்டு விழாவில் சபாநாயகர் பங்கேற்பு
தமிழ்நாடு அரசு தொடக்க கல்வித்துறை சார்பில் ஆண்டு விழா நாகர்கோவில் கோட்டாறு நாராயண குரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு பெரியாரும், காமராஜரும், கலைஞரும் காரணம். முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவு படுத்தி உள்ளார். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தேர்தல் அறிக்கை படி முதல்வர் நிச்சயமாக சொன்னதை செய்து விடுவார். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் தோவாளை வட்டார கல்வி அலுவலர் லதா, அகஸ்தீஸ்வரம் வட்டார கல்வி அலுவலர் எட்வின்ஜேக்கப் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தாம்சன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், இடைநிலை கல்வி உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், தொடக்க கல்வி உதவி திட்ட அலுவலர் துரைராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஏராளம் பேர்கள் கலந்து கொண்டனர்.
Next Story