தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொடக்க கல்வி ஆசிரியர்கள்.
தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களி்ன் உரிமைகளை பறிக்கும் வகையில், அறிவிக்கப்பட்ட மாநில அளவிலான முன்னுரிமை அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூரில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ச.குமார் தலைமை வகித்தார். மாவட்ட டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளர் க.மதியழகன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் இ.சத்தியசீலன், மாநிலச் செயலாளர் ந.கிட்டு தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் அ.எழிலரசன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றும் லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட அரசாணையின் படி, வட்ட அளவிலான முன்னுரிமை இடமாறுதலை, மாநில அளவிலான முன்னுரிமை பட்டியலுக்கு மாற்றியும், இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை கொண்ட அரசாணை எண் 243 ஐ உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story