தொடக்க கல்வி ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் தமிழ்நாடு தொடக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வினை பாதிக்கும் அரசாணை எண் 243 ஐ தமிழக அரசு ரத்து செய்ய வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் சென்னையில் நடக்கும் இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வினை பாதிக்கும் அரசாணை எண் 243 ஐ ஆதரித்து நடக்கும் மாநாட்டில் கல்வி அமைச்சர்கள். இயக்குநர்கள் கலந்து கொள்ள இருப்பதை கண்டித்தும். இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வினை பாதிக்கும் அரசாணை எண் 243ஐ தமிழக அரசு உடனடி யாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அழகுராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டு கருப்பு பட்டை அணிந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story