மருத்துவர் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் - பொதுமக்கள் அவதி

மருத்துவர் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் - பொதுமக்கள் அவதி

மருத்துவம் 

ஆர்எஸ் மங்கலம் தாலுகாவில் ஆனந்தூர் முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இப்பகுதியை சுற்றியுள்ள 50-க்கு மேற்பட்ட கிராம மக்களுக்கு இந்த மருத்துவமனையில் இருதய நோய்,சர்க்கரை நோய்,மகப்பேறு, காய்ச்சல் மற்றும் விபத்துகளால் ஏற்படும் காயங்கள் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இங்கு பணியாற்றிய மருத்துவர் மேல்படிப்புக்கு சென்ற நிலையில் மருத்துவமனை டாக்டர்கள் இல்லாமல் செவிலியர்கள் மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.பத்து நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஒரு டாக்டர் வருவதாக கூறப்படுகிறது.இடைப்பட்ட நாட்களில் டாக்டர்கள் வராததால் கர்ப்பிணிப் பெண்களும்,இருதயம் நாேய்,சர்க்கரை நோயாளிகள் மற்றும் மலேரியா,டெங்கு போன்ற காய்ச்சலுக்கு இங்குள்ள செவிலியர்கள் மட்டுமே சிகிச்சை அளிப்பதால் பொதுமக்கள் ஒரு விதமான பயத்துடன் மாத்திரை,மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர்.

தற்போது பருவ மழை பெய்து வருவதால் இப்பகுதிகள் ஒருவிதமான காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சலின் வீரிய தன்மை அறிந்து சிகிச்சை பெற முடியாமலும் வசதி வாய்ப்பு இல்லாத ஏழை,எளிய பொதுமக்கள் கையில் பணம் இல்லாமல் வெளியூர் சென்று சிகிச்சை பெற முடியாமல் வீட்டிலேயே முடங்கி பெரிதும் சிராமத்திற்கு ஆளாகி வருகின்றன.எனவே மக்களின் நலன் கருதி இந்த மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர்களை நியமனம் செய்ய மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இங்கு மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story