புதுக்கோட்டையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

X
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்
புதுக்கோட்டையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வட்டாரத் தலைவர் ஆ. பிரான்சிஸ் சேவியர் , தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் செ. முனியாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.மல்லிகா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ரா. விரசர்க்கேஸ்வரன், பெ.பழனி செல்வம், பி. சுசிலாராணி, சே. உமாராணி, வட்டார செயலாளர் ஆ. முருகேசன் ஐயோ கலந்து கொண்டு 243ஐ தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
பதவி உயர்வு கலந்தாய்வு வழக்கமான முறையில் நடத்த வேண்டும். 21 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர்.
Next Story
