பிரதமர் விவசாய உதவித்தொகை திட்டம் - பதிவு செய்ய சிறப்பு முகாம்

பிரதமர் விவசாய உதவித்தொகை திட்டம் - பதிவு செய்ய சிறப்பு முகாம்

பைல் படம் 

பிரதமர் விவசாய உதவித்தொகை திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் பதிவு செய்துகொள்ள நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் வரும் ஐூலை முதல் வாரம் முதல் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் பிரதமர் விவசாய உதவித்தொகை திட்டம் 2018-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்ய தேவையான வேளாண் இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கு நிதியுதவி அளித்திடும் வகையில் மத்திய அரசு ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ. 2 ஆயிரம் வீதம், ஆண்டுக்கு மூன்று தவணைகளாக மொத்தம் ரூ.6 ஆயிரத்தை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்குகிறது. ஆதார் எண் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால் இதுவரை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் பயனாளிகள் தொடர்ந்து பயனடைய இ.கே.ஒய்.சி., மற்றும் நில ஆவணங்கள் பதிவேற்றம் போன்ற பணிகளை முடித்திருக்க வேண்டும். எனவே, விடுபட்ட விவசாயிகள் www.pmkisan.gov.in இணையதளத்தில் தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளலாம் அல்லது இ-சேவை மையங்கள் இ-அஞ்சலகங்கள் மற்றும் பி.எம்.கிசான் செயலி மூலமாகவும் இணைக்கலாம். இது தொடர்பாக 4 தாலுகாக்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

ஊட்டி வட்டாரத்தில் வரும் ஜூலை 1-ம் தேதி கக்குச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கிறது. குன்னூர் வட்டாரத்தில், 1-ம்தேதி ஜெதளா காரக்கொரை சமுதாய கூடத்திலும், 2-ம் தேதி குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம், சிம்ஸ் பார்க்கிலும், கூடலூர் வட்டாரத்தில், 1-ம் தேதி புத்தூர்வயல் அரசு உயர் நிலைப்பள்ளியிலும், 2-ம் தேதி முதுகுழி பஞ்சாயத்து அலுவலகத்திலும், எருமாடு கிராம நிர்வாக அலுவலகத்திலும், 3-ம் தேதி உப்பட்டி முதன்மை பதப்படுத்தும் மையத்திலும், 9-ம் தேதி மூனனாடு கிராம நிர்வாக அலுவலகத்திலும், 10-ம் தேதி செருமுள்ளி கூட்டுறவு வங்கியிலும் நடைபெறவுள்ளது.10-ம் தேதி கொளப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகம், 11-ம் தேதி தேவாலா கிராம நிர்வாக அலுவலகம், 16-ம் தேதி ஸ்ரீமதுரை கிராம நிர்வாக அலுவலகம், 17-ம் தேதி அத்திப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 18-ம் தேதி நெல்லியாம்பதி அங்கன்வாடி மையத்திலும், 20-ம் தேதி புளியம்பாறை அரசு நடுநிலைப்பள்ளியிலும், 24-ம் தேதி குனில் பஞ்சாயத்து அலுவலகம், 25-ம் தேதி நெல்லியாளம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், 26-ம் தேதி பந்தலூர் கிராம நிர்வாக அலுவலகத்திலும், 27-ம் தேதி சன்னக்கொல்லி அங்கன்வாடி மையத்திலும் நடைபெறவுள்ளது.

Tags

Next Story