பூக்களுடன் செல்போனை வீச்சு-உரியவரிடம் ஒப்படைக்க அறிவுறுத்திய பிரதமர்!
பிரதமர்
பிரதமர் வந்த போது பாஜகவினர் பூக்களை பிரதமர் மீது வீசி வரவேற்பு அளித்த நிலையில் பூக்களுடன் செல்போனை விசியதால் அதனை உரியவரிடம் ஒப்படைக்க பிரதமர் அறிவுறுத்தினார்.
கோவையில் நேற்று பிரதமர் கலந்து கொண்ட ரோட் ஷோ நிகழ்வின் போது மீண்டும் செல்போன் வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அண்மையில் பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வின் போது பிரதமர் வந்த வாகனத்தின் மீது பூக்களுடன் செல்போன் சேர்ந்து வீசப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணி சாய்பாபா கோவில் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையிலும் நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து இருந்தனர். பிரதமரை வரவேற்கும் வகையில் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் கைகளில் பூக்கள் தூவ கொடுக்கப்பட்டிருந்தது. பிரதமர் வந்த போது பாஜகவினர் பூக்களை பிரதமர் மீது வீசி வரவேற்பு அளித்தனர்.அப்போது பாஜக தொண்டர் ஒருவரின் கையில் இருந்த செல்போனை அங்கு வீடியோ எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒளிப்பதிவாளரின் காலின் அருகே விழுந்தது.இதனை பார்த்த பிரதமர் மோடி செல்போனை எடுத்து உரியவரிடம் கொடுக்க அறிவுறுத்தினார்.இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் செல்போனை எடுத்து பூக்களை செல்போனுடன் வீசிய தொண்டரிடம் கொடுத்தனர்.அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்கில் வேகமாக பரவி வருகிறது.
Next Story