3-வது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பது உறுதி - எல்.முருகன் பேச்சு
எல் முருகன் பேச்சு
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு வழங்கி உள்ள நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்று பாஜக தொண்டர்கள் கூற வேண்டும்., 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும் என்று நாமக்கலில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் மத்திய தகவல்-ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதியின் பாஜக தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய தகவல்- ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கலந்துகொண்டு, கட்சித் தொண்டர்களிடையே சிறப்புரை ஆற்றி பேசினார். பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். அப்போது பாஜகவினர் மத்தியில் அவர் பேசுகையில்..... பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து திறப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நாட்டை மிக வேகமாக வளர்ச்சி அடைந்த நாடாக பிரதமர் உருவாக்கி வருகிறார். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் மூலம் 3 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். வீட்டுக்கு பட்டா மகளிர் பெயரில் வழங்கப்படுகிறது.
பிரதமர், மகளிர் தின பரிசாக சிலிண்டருக்கு 100 ரூபாய் விலை குறைப்பு செய்துள்ளார். உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு 400 ரூபாய் மானியமாக மாதந்தோறும் வழங்கப்படுகிறது.ஏழை எளிய மக்கள் உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 80 கோடி பேருக்கு, மாதம் 5 கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு வழங்கப்பட்டு பயன்பெறுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை கோடி குடும்ப அட்டைகளுக்கு இந்த திட்டம் பயன்படுகிறது.
ஆனால் தமிழ்நாடு அரசு ஸ்டிக்கர் ஒட்டி தனது திட்டம் போல காட்டிக் கொள்கிறது. இந்த உணவு பொருட்களை வழங்குவது பிரதமர் நரேந்திர மோடி ஆவார். விவசாயிகளுக்கு 6000 ரூபாய் கிசான் சம்மான் நிதி, ஏழை எளிய மக்களின் மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்பட அடுத்த 25 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை பிரதமர் அளித்துள்ளார், பிரதமரின் இலட்சியம் வரும் 25 ஆண்டுகளில் நமது நாடு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும்., இந்தியா வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் கனவாக உள்ளது. அதை நோக்கி நாம் பயணம் செய்து வருகிறோம். உள்நாட்டு தயாரிப்பான வந்தே பாரத் ரயில்கள் கோவை- பெங்களூர், சென்னை-மைசூர் சென்னை- திருநெல்வேலி, கோவை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்படுகிறது.
ஆத்ம நிர்பர் பாரத் தொழில்நுட்பத்தோடு சந்திரயான் மூன்று வெற்றிகரமாக தென் துருவத்தில் செலுத்திய முதல் நாடு நமது பாரத நாடு ஆகும். நாமக்கல் மாவட்டத்திலிருந்து அதற்காக ஆய்வு மண் எடுத்துச் செல்லப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து நிலவுகள், நாமக்கல்லில் இருந்து ஆலய மணிகள் சென்றுள்ளன. இதுதான் ஒரே நாடு உன்னத பாரதம் ஆகும்.
ராமக்கல் என்பதுதான் நாமக்கல்லாக மருவி உள்ளது. ராமருடைய தொடர்பில் உள்ள ஊர்தான் நாமக்கல் ஆகும். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவை நிறைவேற்றி வைத்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி ஆவார். திருச்சி அரங்கநாதர் கோவிலில் இருந்து விரதத்தை தொடங்கி ராமேஸ்வரத்தில் விரதத்தை முடித்து அயோத்தியில் சென்று கும்பாபிஷேகத்தை நடத்தி விரதத்தை முடித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
அயோத்திக்கும் நாமக்கல்லுக்கும் தொடர்பு உள்ளதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நாமக்கல் உட்பட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் ஒரே வருடத்தில் தமிழ்நாட்டிற்கு அளித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிரதமர் இது போன்ற திட்டங்களை செயல்படுத்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் என் மண் என் மக்கள் யாத்திரை மிகப் பெரிய வரவேற்பு பெற்று பெற்றுள்ளது. திமுகவின் இயலாமையை இந்த பயணம் எடுத்துக் கூறியுள்ளது. இதையெல்லாம் தொண்டர்கள் எடுத்து கூற வேண்டும். வளர்ச்சி திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும்.பிரதமர் அவர்கள் மூன்றாவது முறையாக 400-க்கும்மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது நிச்சயம் அமைக்கப்பட்ட ஒன்று உறுதி செய்யப்பட்ட ஒன்று.
அதில் நாமக்கல் பாராளுமன்றத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து செல்ல வேண்டும். அதுதான் நமக்கு பெருமை ஆகும். எனவே இன்று முதல் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். பத்தாண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அடுத்து நாம் ஏன் வரவேண்டும் என்றும் பிரதமர் இந்த தேசத்தை வல்லரசு நாடாக இளைஞர் விவசாயிகள் ஏழை எளிய மக்கள் இளைஞர்களின் முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மக்களை சந்திக்க வேண்டும். ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும். பெங்களூரில் இருந்து மதுரைக்கு ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. நாமக்கல் வழியாக இந்த ரயில் இயக்கப்படும். எனவே நாமக்கல்லில் அந்த ரயில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்த கோரிக்கையை மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் எடுத்துச் சென்று நிறைவேற்றி தரப்படும் என்றும் அமைச்சர் எல்.முருகன் வாக்குறுதி அளித்தார்.
நாமக்கல் ரயில் நிலையம் வந்து அம்ரீத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கட்சி நிகழ்ச்சிகள் பேசும்போது தொண்டர்களிடையே கூறினார். இதன்பின்னர், மாவட்ட பாஜக அலுவலகத்தில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக என்றாலே கட்டப்பஞ்சாயத்து, ஊழல் கட்சி, குடும்ப கட்சி என்ற நிலையில் இருந்து, இப்போது போதைப்பொருள் கடத்தல் கட்சியாக மாறிவிட்டது என குறை கூறினார். கடந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் திமுக தோல்வி அடைந்த கட்சியாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக மக்கள் ஆதரவுடன் 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியான ஒன்றாகும். நாமக்கல் மாவட்டத்தில் பாஜக நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.
கட்சி நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி, நாமக்கல்லில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைத்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். என் மண், என் மக்கள் யாத்திரை மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றுள்ளது. திருப்பூரில் நடந்த நிறைவு விழாவில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். பாஜக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறிய அமைச்சர் முருகன், நாமக்கல் வழியாக, புதிதாக இயக்கப்பட உள்ள வந்தே பாரத் இரயில் நாமக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கோடி மக்களிடம் வளர்ச்சி அடைந்த பாரதம், நமது இலட்சியம் குறித்து தேர்தல் விஷன் டாக்குமெண்ட் பாஜக தயாரிக்க உள்ளது.
அதற்காக தான் 1 கோடி மக்களிடம், நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் கருத்து கேட்க முகாம்கள் அமைக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம், நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர்கள் என்.பி.சத்தியமூர்த்தி, எம். ராஜேஷ்குமார்,நகரத் தலைவர் சரவணன் உள்பட மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.