மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
எல். முருகன்
மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதமர் நரேந்திர மோடிபிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அமைச்சரவையில் எனது சகாவான உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். புதிய இந்தியாவை கட்டமைக்கக் கூடிய சிறப்பான பணியில், உங்களது அளவற்ற ஆற்றலும், கடினமான உழைப்பும் அதிகமாக உள்ளது என்றும்,
உங்களது சிறப்பான தேசப் பணிகள் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைகிறது என்றும் குறிப்பிட்டுள்ள பிரதமர், இனிவரும் காலங்களில் ஒளிமயமான எதிர்காலம் அமையும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story