பிரதமர் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்

பிரதமர் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்

சாமி தரிசனம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் சாமி தரிசனம் செய்தார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தா பாறையில் இன்று முதல் நாளை 1 -ம் தேதி வரை 45 மணிநேரம் விவேகானந்தர் தியானம் செய்த அதே இடத்தில் பிரதமர் மோடி தியானம் செய்கிறார். இதையடுத்து இன்று மாலை 4.30 மணியளவில் மோடி டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் 5 .10 மணியளவில் கன்னியாகுமரி வந்தது.

பின்னர் 3 ஹெலிகாப்டர்களும் கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையை சில நிமிட நேரங்கள் வட்டமடித்தது. பின்னர் மோடியுடன் வந்த 3 ஹெலிகாப்டர்களும் விருந்தினர் மாளிகையில் தரையிரங்கியது. பின்னர் பிரதமர் விருந்தினர் மாளிகை சென்றார். அங்கிருந்து 5.40 மணியளவில் கார் மூலம் குமரி பகவதியம்மன் கோவிலில் கொடிமரத்தை சுற்றிய அவர், பின்னர் அம்மணி சாமி தரிசனம் செய்தார். கோவிலில் வைத்து கோவில் நிர்வாகிகள் அவரை வவேற்றனர். அங்கு பிரதமருக்கு பகவதி அம்மன் படம் கோவில் சார்பில் வழங்கப்பட்டது.

Tags

Next Story