பிரதமரின் பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான வழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2023-2024) முதல் இப்கோ டோக்யோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ராபி பருவத்தில் (அக்டோபர் முதல்) பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.

இந்த பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தின் பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு வாகனம் இன்று விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களிலும், 31.10.2023- அன்று அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி, ஆகிய வட்டாரங்களிலும், 01.11.2023- அன்று சிவகாசி, இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய வட்டாரங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது. என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story