பிரதமர் வருகை - காங்கிரஸ் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

பிரதமர் வருகை - காங்கிரஸ் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை கண்டித்து திருப்பூரில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்தி வந்த என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரம்மாண்டமான மாநாடாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக சார்பில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை பாஜக ஆட்சிக்கு வந்தும் இதுவரை நிறைவேற்ற வில்லை என்று கூறியும் விவசாயிகளை ஒன்றிய அரசு வஞ்சிப்பதாகவும் கூறி மோடியின் வருகை எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்தும் கருப்பு கொடிகளை கைகளில் ஏந்தி திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர்.லெனின் பிரசாத் கலந்து கொண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர். லெனின் பிரசாத் கூறுகையில் இந்திய திருநாட்டிற்கு சுதந்திரத்திற்கு எதிராக பாடுபட்டவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் தற்பொழுது என் மனம் என் மக்கள் என்ற பெயரில் மக்களை திசை திருப்பும் வகையில் செய்து வருகின்றனர் என்றும் ,தொடர்ந்து இலங்கை கடற் படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதை இந்திய அரசு வேடிக்கை பார்த்து வருவதாகவும் மேலும் சுதந்திரத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்துவது என்பது வேதனைக்குள்ளான விஷயம் என்றும் கூறினார் .

அதனைத் தொடர்ந்து தியாகி குமரனின் சிலைக்கு பால் ஊற்றி சிலையை கழுவினார் .தொடர்ந்து பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர் இளைஞர் காங்கிரஸ் கட்சியினரின் இத்தகைய போராட்டத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story