புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்ட பிரின்ஸ் எம் எல் ஏ !
கட்டுமான பணி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட காமராஜர் பேருந்து நிலையத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் துவங்கியது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். புதிய பஸ் ஸ்டாண்டின் அண்டர் கிரவுண்டில் பைக் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் 38 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டிடத்தில் ஒயரிங் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் மின் இணைப்பு பெறப்படும். மேலும் கடைகளுக்கு படிக்கட்டுகள் மற்றும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளது. இந்த பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடிக்கப்படும் என நகராட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அங்கு நடந்து வரும் பணிகளை குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முடிக்கப்பட்டுள்ள பணிகளை நகராட்சி பொறியாளரிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் நசீர், மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் யூசுப் கான், மீனவர்கள் காங்கிரஸ் தலைவர் ஸ்டாரின் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.