சேலத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்

சேலத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சேலத்தில் நாளை 9 இடங்களில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடக்கிறது.

சேலத்தில் நாளை 9 இடங்களில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடக்கிறது.

சேலம் மாநகர, நகர, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் டிசம்பர்18 முதல் ஜனவரி 6 வரை 16 வேலை நாட்களில் 142 முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் படி 4 -வது நாளான நாளை சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் வார்டு 18 பகுதிக்குட்பட்ட சோனா கல்லூரி, தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரி , அஸ்தம்பட்டி 7வது வார்டு பகுதிக்குட்பட்ட கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள வேதவள்ளி திருமண மண்டபம், அம்மாபேட்டை வார்டு 32 பகுதிக்குட்பட்ட மேட்டுமக்கான் தெரு, லால்மஜித் சமுதாய கூடம் மற்றும் கொண்டலாம்பட்டி வார்டு 48 பகுதிக்குட்பட்ட குகை லைன் ரோட்டில் உள்ள கோகிலா மண்டபத்தில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

மேலும், எடப்பாடி நகராட்சி, எடப்பாடி வார்டு 1, 2, 3, 4, 5 பகுதிகளுக்குட்பட்ட பஸ் நிலையம் ராஜாஜி பூங்கா அருகில் உள்ள எம்.இ.எஸ் பள்ளி, எடப்பாடி வார்டு 9,10,11,12 ,13 பகுதிகளுக்குட்பட்ட அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி. தம்மம்பட்டி பேரூராட்சியில் கொங்கு வேளாளர் திருமணமண்டபம் மற்றும் கெங்கவல்லி பேரூராட்சியில் ஸ்ரீ ராமலிங்கம் திருமண மண்டபம் மற்றும் வீராணம் கிராம ஊராட்சிக்கு மோட்டூர், கோவிந்தசாமி சுசீலா திருமண மண்டபம் என மொத்தம் 9 இடங்களில் “மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story