விழுப்புரத்தில் தேர்தல் பயன்பாட்டுக்கான படிவங்கள் அச்சடிக்கும் பணி
ஆட்சியர் ஆய்வு
விழுப்புரத்தில் தேர்தல் பயன்பாட்டுக்கான படிவங்கள் அச்சடிக்கும் பணி.ஆட்சியர் நேரில் ஆய்வு.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. அதனடிப்படையில் விழுப்பு ரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் தேர்தல் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் படிவங்கள், வேட்பாளர்களின் விவரங்கள் உள் ளிட்டவைகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இப்பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான சி.பழனி நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் படிவங்கள், வேட்பாளர்களின் விவரங்கள் ஆகியவற்றை சரியான முறையில் அச்சடிக்கும்படியும், பணியை விரைந்து முடிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார், இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச், கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், விழுப்புரம் கோட் டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பெரியசாமி, விழுப்புரம் நகராட்சி ஆணையர் ரமேஷ், தாசில்தார் வசந்தகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Next Story