போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாறை மீது குதித்த கைதிக்கு கால் முறிவு

போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாறை மீது குதித்த கைதிக்கு கால் முறிவு

கோவையில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாறை மீது குதித்த கைதிக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

கோவையில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாறை மீது குதித்த கைதிக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

கோவை: கூடலூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் விஜயரத்தினம் ( 27 ) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.2019 ஆம் ஆண்டு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் மத்திய சிறைச்சாலை சார்பில் நடத்தபடும் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி கைதி விஜயரத்தினம் பணியில் இருந்த போது தப்பி கூடலூருக்கு வந்தவர் வனப்பகுதிக்குள் ஒளிந்து இருந்ததால் அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று இரவு தப்பியோடிய கைதி விஜயரத்தினம் ஊருக்குள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.அப்போது மீண்டும் தப்ப முயன்ற விஜயரத்தினம் பாறையின் மீது குதித்த போது கால் முறிவு ஏற்பட்டது.அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ள நிலையில் மேலும் அவர் மீது கூடுதலாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story