கைதி உண்ணாவிரதம்

கைதி உண்ணாவிரதம்

சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதி நடைபயிற்சிக்கு அனுமதி வழங்க உண்ணவிரதம் இருந்தார்.


சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதி நடைபயிற்சிக்கு அனுமதி வழங்க உண்ணவிரதம் இருந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வில்சன். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் பணியில் இருந்த போது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (வயது 32), தவுபிக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. மேலும் கைதான 2 பேரும் சேலம் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு அறையில் தனித்தனியாக அறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே நடைப்பயிற்சிக்கு அனுமதிக்க கோரி நேற்று முன்தினம் அப்துல்சமீம் திடீரென உண்ணாவிரதம் இருந்தார். மேலும் அவர் நேற்று காலையும் சாப்பாடு வாங்காமல் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதையடுத்து அவரிடம் சிறை சூப்பிரண்டு வினோத் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் உயர் பாதுகாப்பு பிரிவில் இருப்பதால் நடைப்பயிற்சிக்கு அனுமதிக்க முடியாது என்றார். இதையடுத்து அவர் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டு மதிய சாப்பாடு வாங்கி சாப்பிட்டார்.

Tags

Next Story