வேலூர் சிறுவர்சீர்திருத்த பள்ளியில் தப்பிய கைதி திருச்செங்கோட்டில் கைது

வேலூர் சிறுவர்சீர்திருத்த பள்ளியில் தப்பிய கைதி திருச்செங்கோட்டில் கைது
X

பிடிபட்ட கைதி

வேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பிய கைதி திருச்செங்கோட்டில் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழில் செய்து வரும் சிவசுப்பிரமணியம் என்பவரது மகன் எலி (எ) நவீன் குமார்.

இவர் கூலி வேலை செய்து வந்த நிலையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என இவர் மீது திருச்செங்கோடு நகர காவல் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில்வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் வேலூர் திருட்டு முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப் பட்டிருந்தான்.

இந்த நிலையில் கடந்த 27.04.23அன்று வேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் என்பதால் இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப் பட்டிருந்தது இதனால்நவீன் குமார் வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்த திருச்செங்கோடு நகர காவல் துறையினருக்கு நேற்று இரவு நவீன் குமார் தனது பெற்றோரை காண வீட்டுக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.

இது குறித்து வேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து சென்று நவீன் குமாரை பிடித்து அதிகாலை வேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

எலி என்கிற நவீன் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்செங்கோடு கிழக்கு ரத வீதியில் உள்ள இந்தியன் வங்கிகிளையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story