செங்கல்பட்டு: வங்கி கிளை மேலாளர் கைது

செங்கல்பட்டு: வங்கி கிளை மேலாளர் கைது
பல லட்சம் மோசடி
தனியார் வங்கியில் நிதி உதவி வழங்கி தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருப்பதாக கூறி வாடிக்கையாளர்ளிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய வங்கி கிளை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்தில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனம் (இசாப் வங்கி) மகளிர் குழுக்களுக்கு நிதி உதவி செய்து வசூல் செய்து வருகின்றனர். அந்த வங்கியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஆனந்த் என்பவர் கிளை மேலாளராக பணியாற்றியுள்ளார்.

அவர் மகளிர் குழுக்களின் நம்பிக்கைக்குரிய மேலாளராக திகழ்ந்து வந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏழு லட்சத்தை 65 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு நிதி உதவி அளித்துள்ளார்.பாராளுமன்றத் தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருப்பதாக கூறி வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் மூலம் பணத்தை அனுப்பிவிட்டு பிறகு பணத்தை வாடிக்கையாளர்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து வங்கி மேலாளர் தனது சாமர்த்தியமான பேச்சால் நீங்கள் பணத்தை என்னிடம் தாருங்கள் தேர்தல் நடைமுறை இருப்பதால் நீங்கள் இவ்வளவு தொகையை எடுத்துச் செல்ல முடியாது எனக் கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஆனால் இதுவரை பெற்றுக்கொண்ட பணத்தை வாடிக்கையாளர்களுக்கு ரூ.7.65லட்சத்தை இதுவரை வழங்கவில்லை. பலமுறை மேலாளரை அனுகியும் மேலாளர் ஆனந்தன் பணத்தை தராததால் வங்கியின் டிவிஷனல் மேனேஜர் தமிழ் புத்தன் மதுராந்தகம் காவல் நிலையத்தில் கிளை மேலாளர் ஆனந்தன் மீது புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் மதுராந்தகம் போலீசார் கிளை மேலாளர் ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வாடிக்கையாளர்கள் இடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டதை மேலாளர் ஒப்புக்கொண்டார்.

Tags

Next Story