ஆத்தூரில் பைக் மீது தனியார் பேருந்து மோதல்: காவலர் படுகாயம்
விபத்துக்குள்ளான பேருந்து
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள இழுப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் குமரேசன் (26). தர்மபுரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சிறப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் போச்சம்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து,
செல்லியம்பாளையம் பிரிவு சாலையில் குமரேசன் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் காவலர் இருசக்கர வாகனம் பேருந்து முன்பகுதியில் மோதியதில் கால் மற்றும் கைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.விபத்து குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனம் இது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காவலர்