பெரம்பலூரில் பைக் மீது தனியார் பேருந்து மோதல்: ஒருவர் உயிரிழப்பு

பெரம்பலூரில் பைக் மீது தனியார் பேருந்து மோதல்: ஒருவர் உயிரிழப்பு

சாலை மறியலில் ஈடுபட்டனர் 

பெரம்பலூரில் பைக் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் எசனை அருகே அன்னமங்கலம் பிரிவு பாதையில் எசனையை சேர்ந்த செல்வராஜ் வயது 63 என்பவர் மார்ச் - 9 ம் தேதி காலை 6.30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார் அப்போது மலையாள பட்டியலில் இருந்து பெரம்பலூர் நோக்கி அதிவேகமாக வந்ததனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி,

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே சாலை ஓரம் இருந்த செந்தில் குமார் என்பவரது வீட்டின சுவர் மற்றும் மரத்தில் மீது மோதி நின்றது, இந்த விபத்தில் செல்வராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

மேலும் வீட்டின் முன் நின்ற செந்தில்குமார்படுகாயம் அடைந்தார், இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அதி வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுவதாகவும் இதனால் அங்கு வேகத்தடை மற்றும் பேரிகாடு அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காலை 8 மணி முதல் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டினார் .

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, போக்குவரத்தை சரி செய்தனர். காலை 9 மணி அளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Tags

Next Story