டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து - தம்பதி பலி

டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து - தம்பதி பலி
X

பைல் படம் 

சிங்கப்பெருமாள் கோயில் அருகே தனியார் நிறுவன பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுமனை புகுவிழா அழைப்பிதழ் தருவதற்காக செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்துக்கு பைக்கில் சென்ற தம்பதி, பேருந்து மோதி உயிரிழந்தனர். அதிகாலை வேளை, மனைவி ஜெயலட்சுமியுடன் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த வெங்கடேசன், முன்னால் சென்ற டிரெய்லர் லாரி வளைவில் திரும்புவதை பார்த்ததும் பைக்கை உடனடியாக நிறுத்தியுள்ளார். அப்போது, தனியார் தொழிற்சாலைக்கு பணியாளர்களை அழைத்துச் சென்றபடி பின்னால் வந்த பேருந்து, இவர்களது பைக் மற்றும் டிரெய்லர் லாரி மீது வேகமாக மோதியது. ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயேயும், வெங்கடேசன் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். முன்பக்கம் முழுவதுமாக நொறுங்கிய பேருந்தில் சிக்கிக்கொண்ட ஓட்டுநருக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

Tags

Next Story