விருதுநகரில் வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகரில் வேலைவாய்ப்பு முகாம்

ஆட்சியர்

விருதுநகரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாற்றுத்;திறனாளிகள் நலத்துறை இணைந்து விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்; 21.06.2024 அன்று சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 30 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐஃடிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய மாற்றுத்திறனாளி மற்றும் பொது வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். இவ்வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் அவர்களுக்கான பிரத்யேக பயிற்சி அளித்து பணியில் அமர்த்தும் தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெறவுள்ளனர்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் 21.06.2024 அன்று காலை 09.00 மணிமுதல் மாலை 3.00 மணிவரை கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்போர் ஆகியோர் https://tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. எனவே, இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story