சீலநாயக்கன்பட்டியில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை !
தற்கொலை
சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 62). தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் விஷம் குடித்து விட்டு, சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை அடிவாரத்தில் மயங்கி கிடந்தார்.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் சோமசுந்தரத்தின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story