தனியார் தொழிற்சாலை வேலை வாய்ப்பு முகாம் : ஏராளமானவர்கள் பங்கேற்பு..!
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் பல்வேறு வேலைவாய்ப்புகள் முகாம் நடைபெற்று வருகிறது. மாதந்தோறும் தனியார் தொழிற்சாலைகள் பங்கேற்கும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறுவது வழக்கம்." "அவ்வகையில் காலை 10 மணிக்கு துவங்கிய தனியார் தொழிற்சாலை வேலை வாய்ப்பு முகாமினை இணை இயக்குனர் அருணகிரி தொடங்கி வைத்து, வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு முறைகளை எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து இம்மாமில் 30க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் தொழிற்சாலையில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து விவரித்து அதற்குண்டான ஆட்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்." "இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு ,+2, கலை அறிவியல் பட்டதாரிகள் தொழில் நுட்பக் கல்லூரி பட்டதாரிகள் ஆண் பெண் என 200க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் சுய விவர குறிப்புகளை அளித்து நேர்முகத் தேர்வில் பங்கேற்று வருகின்றனர்.
காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை இந்த நேர்முகத் தேர்வுகள் அவ்வளாகத்தில் நடைபெறும் எனவும், அதில் தேர்வு பெறும் நபர்களுக்கு பணி ஆணை மாலை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வழிகாட்டு மட்டுமல்லாமல் தனியார் தொழிற்சாலைகளில் உள்ள காலி பணியிடங்களையும் அறிந்து , மாவட்ட நிர்வாகம் அவர்களை அழைத்து சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் நடத்தி வருவது வரவேற்பை பெற்றுள்ளது."