தனியார் -அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் மோதல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் போக்குவரத்து பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுனராக சாத்தூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (54) என்பவரும் ஆமத்தூர் அருகிலுள்ள வெல்லூர் பகுதியைச் சேர்ந்த முனியசாமி (55) என்பவர் நடத்துனராகவும் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம்போல இருவரும் விருதுநகர் மார்க்கமாக செல்லும் அரசு பேருந்து ஓட்டி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் இருந்த போது தனியார் பேருந்து ஓட்டுனராக பணி புரியும் வத்றாப் அருகில் உள்ள பட்டி ஓடை பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் பேருந்து ஓட்டுவதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறி அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இறுதியில் வாக்குவாதம் முற்றி கைகளைப்பு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடையே ஏற்பட்ட தகராறில் பேருந்து கண்ணாடியும் உடைக்கப்பட்டதாக தெரிய வருகிறது. இதனை அடுத்து அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் இருதரப்பினரும் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போய் சேர்ந்துள்ளனர்.
பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தகராறு குறித்து தகவல் அறிந்த சாத்தூர் போக்குவரத்து பணிமனை அனைத்து சங்க உறுப்பினர்களும் அரசு பேருந்து மற்றும் ஓட்டுநர்கள் அனைவரும் சாத்தூர் நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முற்றுகையிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் கலைந்து சென்றனர். ஏராளமானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.