இளைஞர் அடித்து கொல்லப்பட்ட விவகாரம் - தனியார் மருத்துவமனை ஊழியர்கள் கைது

இளைஞர் அடித்து கொல்லப்பட்ட விவகாரம் - தனியார் மருத்துவமனை ஊழியர்கள் கைது

நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட குற்றவாளிகள் 

கோவை தனியார் மருத்துவமனையில் திருட வந்ததாக இளைஞர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் மருத்துவமனை ஊழியர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் கடந்த திங்கட் கிழமை திருட வந்த ராஜா என்ற நபரை அந்த மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள் தாக்கினர்.இதில் படுகாயம் அடைந்த ராஜா அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதலில் இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார், பின்னர் அதனை கொலை வழக்காக மாற்றினர்.

இது தொடர்பான விசாரணையில் அந்த மருத்துவமனையின் துணைத்தலைவர் நாராயணன் உட்பட பலர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.இதில் முதல் கட்டமாக மருத்துவமனை துணை தலைவர் நாராயணன்,வர்த்தக பிரிவு மேலாளர் சசிகுமார்,தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ரமேஷ்,மருத்துவமனை நெட்வொர்க் பிரிவு அலுவலர் சரவணன், மற்றும் காவலாளிகள் சரவணகுமார், மணிகண்டன்,சதீஷ்குமார்,சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு முகமூடி அணிவித்தபடி காவல் நிலையத்தில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட எட்டு பேரும் நேற்று இரவு இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் ஜூன் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story