தனியார் ஆம்னி பஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு!

தனியார் ஆம்னி பஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு!

சேவைக் குறைபாடு காரணமாக  தனியார் ஆம்னி பஸ் நிறுவனம் ரூ.10,625 இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

சேவைக் குறைபாடு காரணமாக  தனியார் ஆம்னி பஸ் நிறுவனம் ரூ.10,625 இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

தென்காசி மாவட்டம் முத்து கிருஷ்ணாபுரத்தைச் பட்டு சாமி என்பவர் தனது நண்பர் பணி நிமித்தமாக சென்னை செல்ல வேண்டியிருந்ததால் பஸ் டிக்கெட் பதிவு செய்து தரும்படி கேட்டுக் கொண்டதால் இணையதளம் மூலம் பஸ் டிக்கெட் ஒன்று முன்பதிவு செய்துள்ளார். அதன் பின்னர் குறிப்பிட்ட நாளன்று பயணம் செய்வதற்கு சென்றுள்ளனர். ஆனால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்ட நேரப்படி எந்த பேருந்தும் வரவில்லை. உடனே அந்த டிக்கெட்டிலிருந்த அலுவலக அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கேட்டதற்கு பஸ் ரத்தாவதற்கெல்லாம் எங்கள் அலுவலகமோ அல்லது நானோ பொறுப்பு கிடையாது.

இதை எங்கள் நிறுவனத்தின் முதலாளிகிட்ட போய் கேள் என்று தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். டிக்கெட்டிற்கான பணம் திரும்ப கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான பட்டுசாமி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பின்பு இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் டிக்கெட்டிற்கு செலுத்திய பணம் ரூ.625, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ரூ.5,000 மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ.5,000 ஆக மொத்தம் ரூ.10,625-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags

Next Story