கணியாமூர் தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கணியாமூர் தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தனியார் பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சி 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கனியாமூர் சக்தி மெட்ரிக் மற்றும் இ.சி.ஆர்., சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி நிறுவனர் பார்வதியம்மாள் தலைமை தாங்கினார். தாளாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

செயலாளர் சாந்தி ரவிக்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றபட்டிமன்ற பேச்சாளர் டாக்டர் பர்வீன் சுல்தானா பேசுகையில், 'எதிர்காலத்தில் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட அடித்தளமாக இருப்பது பள்ளிக்கல்வி. நீங்கள் எந்த வேலைக்குச் செல்ல வேண்டுமென்றாலும், எந்த துறையில் சாதிக்க வேண்டுமென்றாலும் பள்ளி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.

இதுதான் உங்களது அடித்தளம். குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதில் பெறும் மதிப்பெண்ணை வைத்து தான், நல்ல துறையை தேர்வு செய்து படிக்க முடியும்' என மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story