பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

பள்ளி வாகனங்களை  ஆய்வு செய்த கலெக்டர்

கலெக்டர் ஆய்வு

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் பள்ளி வாகனங்களில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக உள்ளதா என்பதை கண்டறிய ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து தொடங்கி வைத்தார். அப்போது வாகனங்களில் அவசர கால வழி கதவுகள், முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள், ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்றும், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் முன்புறமும் பின்புறமும் முறையாக இயங்குகிறதா என்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story