தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

பள்ளி வாகனங்கள் ஆய்வு 

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியாா் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில், 23 பள்ளிகளின் 58 வாகனங்கள் பங்கேற்றன. வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, அவசர கால வெளியேறும் கதவு, தீயணைப்புக் கருவி, முதலுதவிப் பெட்டி, சிசிடிவி கேமரா உள்ளிட்டவை, அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி உள்ளனவா என, போக்குவரத்து வாகன ஆய்வாளா் கனகவல்லி ஆய்வு செய்தாா்.

41 வாகனங்களில் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மற்ற வாகனங்களின் குறைபாடுகளை இம்மாத இறுதிக்குள் சரிசெய்து, ஆய்வுக்குப் பின்னா் இயக்கமாறு அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக, ஆலங்குளம் தீயணைப்பு துறை நிலைய அலுவலா் விஜயன் பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு விபத்தின்போது செயல்பட வேண்டியவிதம் குறித்து விளக்கமளித்தாா். மாவட்ட தனியாா் பள்ளிகளின் கல்விக் கண்காணிப்பாளா் ஆனந்தன், ஆலங்குளம் காவல் ஆய்வாளா் மாதவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story