தனியார் பள்ளி வேன் பறிமுதல்

தனியார் பள்ளி வேன்  பறிமுதல்
கெங்கவல்லி
சாலை வரி செலுத்தாமல் இயங்கிய தனியார் பள்ளி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கெங்கவல்லி:சேலம் கெங்கவல்லியில், ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி தலைமையில் குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அனுமதி சீட்டு இல்லாமல், தகுதி சான்றிதழ் புதுப்பிக்காமல், சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட தனியார் பள்ளி வேனை பறிமுதல் செய்து கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து, மேல் நடவடிக்கைக்கு அறிவுறுத்தினர்.

Tags

Next Story