தனியார் பள்ளி வாகனம் ஆய்வு
சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் எடப்பாடி வட்டாரங்களில் செயல்பட்டு வரும் 31 தனியார் பள்ளிகளின் வாகனங்கள் தங்காயூர் அருகே ஒரே இடத்தில் சங்ககிரி கோட்டாட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோர் 216 வாகனங்களை ஆய்வு செய்து 5 வாகனங்களிலுள்ள பழுதுகளை சரி பார்த்து வரும்படி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு.சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் எடப்பாடி வட்டாரங்களில் செயல்பட்டு வரும் 31 தனியார் பள்ளிகள் மூலம் 274 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கொங்கணாபுரம் ஒன்றியம் தங்காயூர் ஊராட்சியில் சங்ககிரி கோட்டாட்சியர் லோகநாயகி, டிஎஸ்பி ராஜா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியம் உட்பட தீயணைப்புத்துத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்ட 216 வாகனங்களை ஆய்வு செய்தனர்.
இது குறித்து சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியம் சங்ககிரி மற்றும் எடப்பாடி வட்டாரங்களில் மொத்தம் 274 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் 58 பள்ளி வாகனங்கள் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருவதாகவும் இன்று ஆய்வுக்கு கொண்டு வரப்பட்ட 216 வாகனங்களில் படி, சீட் கவர், அவசர வழி கதவுகள் ஆய்வு செய்த போது போதிய பராமரிப்பு வசதிகள் இல்லாத 5 வாகனங்களை சீர் செய்து வருகின்ற 15ந் தேதிக்குள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து காண்பிக்க வேண்டும் என அறுவுறுத்தி திருப்பி அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சார்பில் பாதுகாப்பாக வாகனங்கள் இயக்குவது, தீ விபத்து ஏற்பட்டால் அதனை தவிர்க்க எந்த முறையில் கையாள வேண்டும் என்பது குறித்தும் பள்ளி வாகன ஓட்டுநர்கள் முன்னிலையில் ஒத்திகை செய்து காண்பித்த இக்காட்சி தத்துருவமாக இருந்தது. இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செந்தில்குமார், புஷ்பா மற்றும் அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.