தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

பணி நியமன ஆணை 

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் வழங்கினர்.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி, மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story