நாகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாகப்பட்டினம் நகராட்சி பள்ளியில் நடைப்பெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் நகராட்சி காடம்பாடி அரசு நடுநிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வேலை தேடுபவர்களுக்கான மாவட்ட அளவிலான இவ்வேலைவாய்ப்பு முகாமில் 72 தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றனர். மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட சுமார் 1147 நபர்களில் 196 நபர்கள் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தலைவர் அவர்கள், தமிழ்நாடு தாட்கோ கழகத்தலைவர் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் நகர்மன்றத் தலைவர்.மாரிமுத்து, திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) முருகேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எம்.ஸ்ரீநிவாசன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பா.முத்துகிருஷ்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story