தேனியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தேனியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

தேனியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு (ம)தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நாளை நடைபெற உள்ளது

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (15.03.2024) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுனர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் கல்வித் தகுதியுடையவர்கள் மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு மற்றும் இளநிலை முதுநிலை பட்டப்படிப்புகள்,

பொறியியல் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். எனவே வேலைநாடுநர்கள் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்கலுடன் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி (04546 – 254510 அல்லது 9715326379) எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story