திருவாரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூரில்  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

 மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ 

திருவாரூரில் வரும் 17ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் திருவாரூர் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர் மயிலாடுதுறை சாலை புதுத்தெருவில் உள்ள நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story