சிவகாசியில் சப்-கலெக்டராக பிரியா ரவிச்சந்திரன் பொறுப்பு ஏற்பு

சிவகாசியில் சப்-கலெக்டராக பிரியா ரவிச்சந்திரன் பொறுப்பு ஏற்பு
சிவகாசியில் சப்-கலெக்டராக பிரியா ரவிச்சந்திரன் பொறுப்பு ஏற்பு...
சிவகாசியில் சப்-கலெக்டராக பிரியா ரவிச்சந்திரன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஆர்.டி.ஓ.வாக பணியாற்றி வந்த விஸ்வநாதன் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக பிரியா ரவிச்சந்திரன் சப்-கலெக்டராக தமிழக அரசு நியமித்த நிலையில் பிரியாரவிச்சந்திரன் சப்-கலெக்டராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட,

அவரிடம் விஸ்வநாதன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.சப்-கலெக்டர் பிரியா ரவிச்சந்திரனனுக்கு தாசில்தார்கள் ராம்தாஸ், வடிவேல் மற்றும் வருவாய்த் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

சிவகாசிக்கு சப்- கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள பிரியா ரவிச்சந்திரன் சேலத்தை சேர்ந்த இவர்,சேலத்தில் பள்ளிப்படிப்பு,சென்னை எத்திராஜ் கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்பு, புதுடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலையில் முதுகலை மற்றும் எம்.பில்.,பட்டமும் பெற்றார்.26வது வயதில் நாகை மாவட்டத்தில் முதன் முதலில் தனது தீயணைப்புத்துறை பணியை தொடங்கிய அவர் பல்வேறு,

இடங்களில் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை அதிகாரியாகவும் பணியாற்றிய போது,2003ல் தமிழக அரசின் குரூப் 1 அதிகாரியாக பணியில் சேர்ந்து இணை இயக்குநர் நிலைக்கு உயர்ந்த இவருக்கு துணிச்சலான செயலை பாராட்டி அவருக்கு 2012ல் அண்ணா பதக்கம்,2013ல் இந்திய குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டது.தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைசேவைக்காக முதல்வர் விருது 2014ல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story